நீலகிரி மாவட்டம், உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கோலப்போட்டிகளில் வெற்றி பெற்ற தோட்டப் பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி, பாராட்டினார்,
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மின்னல் கலைக்குழுவினர், படுகர் மற்றும் தோடர் ஆகியோரின் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார், இந்நிகழ்ச்சி யில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது நமது மாவட்டத்தில், பொங்கல் விழாவானது ஒவ்வொரு வருடமும் சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுற்றுலாத்துறை சார்பில் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுடன்இணைந்து பொங்கல் வைக்கப்பட்டது. மேலும், பொங்கல் விழாவினை சிறப்பாககொண்டாடும் வகையில் கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும், சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது, எ சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும்
போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் எனவும் அனைவருக்கும்
பொங்கல் நல்வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார், விழா தொடர்ச்சியாக அங்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் இனிப்பு பொங்கல் வழங்கினார், பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உறியடித்து போட்டிகளை துவக்கி வைத்து, சுற்றுலா பயணிகள் பொதுமக்களின் பல்வேறு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார், தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு உறியடி போட்டிகள், இசை நாற்காலி போட்டிகள், லெமன் ஸ்பூன் போட்டிகள், நடைபெற்றன, இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பூங்காற்றுகள் கொடுத்து வாழ்த்தினர், இவ்விழாவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் துர்காதேவி, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட நீலகிரி மலைவாழ் மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்,

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0