கோவை : தமிழக வெற்றி கழக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவையில் கடந்த 2நாட்களாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகஅந்த கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் கோவை வந்தார் . அப்போது அவரை வரவேற்பதற்காகவும், பார்ப்பதற்காகவும், கோவை விமான நிலையத்தில் அந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பலர் அங்கு திரண்டனர்.அந்தக் கட்சி நிர்வாகிகள் பலர் விமான நிலையத்திற்கு வந்ததால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால் விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் விமான நிலையத்தில் குவிந்து இருந்த நிர்வாகிகள் மற்றும் பலர் அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை அகற்றி அதன் மீது ஏறி குதித்துச் சென்றனர். இதன் காரணமாக விமான நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. அத்துடன் விமான நிலையத்தில் இருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. அதுபோன்று விமான நிலைய சாலையில் அந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளை ஏற்றி வந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்வகையில் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பீளமேடுபோலீசார் தமிழக வெற்றிக்கழக மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத் உட்பட பலர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் விமான நிலைய ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகையை யொட்டி விமான நிலைய ரோட்டில் தி.மு.க. கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தது. அந்த கொடி கம்பத்தை சிலர் தள்ளி சேதப்படுத்தியதாக தெரிகிறது .இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி திமுக கொடியை சேதப்படுத்தியதாக தவெ.க நிர்வாகிகளான திண்டுக்கல் செல்லமுத்து ,ஒட்டன்சத்திரம் மனோஜ் குமார்ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0