ஓடும் ரயிலில் தவறவிட்ட செல்போன் மற்றும் பணப்பை அடங்கிய கைப்பையை போலீசார் மீட்டனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த முருகனின் மனைவி லதா நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். ரயில் ஓசூர் ரயில் நிலையத்தை அடையும் சமயம் லதா வைத்திருந்த கைப்பை எங்கேயோ தவறவிட்டதாக ஓசூர் ரயில்வே நிலைய போலீஸிடம் புகார் கொடுத்தார். பையில் மொபைல் போன் மற்றும் ரொக்க பணம் ரூபாய் ஆயிரம் இருந்ததாக அழுது கொண்டே கூறினார். இது குறித்து இருப்புப் பாதை ரயில்வே போலீசார் நீண்ட தூரம் தண்டவாளத்தில் நடந்தே வந்து தேடிப் பார்த்தபோது கை பை கிடைத்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா மற்றும் டிஐஜி அபிஷேக் தீக் க்ஷித் ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோர் ஓசூர் ரயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.