பரந்தூர் மக்களை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்க்கு போலீசார் அனுமதி.முதல் முறையாக களத்திற்கு நேரடியாக செல்கிறார்.

சென்னை: பரந்தூர் விமான நிலையம் சென்று மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டார். இதற்காக வரும் 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் விஜய் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறையிடம் தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டு இருந்தது.

போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது, விஜய் பரந்தூர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. வரும் 20 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரந்தூர் செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பரந்தூரை சுற்றி 5,100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. விமான நிலையம் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கைப்பற்ற கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

ஏகனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 900 நாட்களை கடந்தும் இந்த போராட்டம் நீடித்து வருகிறது.. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டில், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினாலும் அதன்பிறகு களத்திற்கு விஜய் செல்லவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான், பரந்தூர் சென்று மக்களை நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டார்.

இதற்காக போலீசாரிடம் அனுமதியை தவெக நிர்வாகிகள் கேட்டு இருந்தனர். வரும் 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் விஜய் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. விஜய் மக்களை சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளையும் தவெக நிர்வாகிகள் செய்து வந்தனர். போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது, விஜய் பரந்தூர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

வரும் 20 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரந்தூர் செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர். தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து களத்திற்கு சென்று மக்களை சந்திக்கவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக விஜய் களத்திற்கு நேரடியாக செல்கிறார்.