வால்பாறையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு அபராதம் விதித்து காவல்துறை நடவடிக்கை

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து சென்றனர் இந்நிலையில் அண்ணா சிலை அருகே உள்ள நகர்வழி சாலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றிருந்ததால் அவ்வழியாக சென்ற பேருந்து, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இத்தகவலறிந்து வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் பழனி மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன ஓட்டுனரை வரவழைத்த போது அவர் மது போதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது இதனையடுத்து போக்குவரத்தை சீர் செய்த காவல் துறையினர் இடையூராக நின்றிருந்த வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்று ஓட்டுனர் மீது மது போதையில் வாகனத்தை இயக்கியதாக வழக்கு பதிவு செய்து தகுந்த அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் காவல் துறையினரின் இந்த நடவடிக்கையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது