புதுடில்லி: நம் நாடு 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்ததை பாராட்டும் விதமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.இந்தியாவில் கோவிட் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன. இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. தற்போதைய சூழலில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூலை 17ம் தேதி 200 கோடி டோஸ் என்னும் மைல்கல்லை கடந்து இந்தியா சாதனை படைத்தது. இதற்கு பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த நிலையில், 200 கோடி டோஸ் தடுப்பூசி சாதனையை அடைந்ததற்காக தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவிக்கும் விதமாக தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு பாராட்டு கடிதங்களை எழுதி வாழ்த்தியுள்ளார். இதனை தடுப்பூசி செலுத்தியவர்கள் ‘கோவின்’ (CoWIN) தளத்தில் உள்ளீடு செய்து பிரதமரின் பாராட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0