காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து.!!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 81-வது நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனட்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பதிவில் ” காங்கிரஸ் தலைவர் திரு கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான அவரது உறுதியான நம்பிக்கை, அவரது தலைமை, விடாமுயற்சி மற்றும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை நம்மை தினமும் ஊக்குவிக்கின்றன. அவரது விடாமுயற்சியும் கடின உழைப்பும் அவரது பொது வாழ்வின் அடையாளம்.” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி கார்கேவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு அவரது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன் கார்கே தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் (INC) கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 1942-ம் ஆண்டு கர்நாடகாவில் ஜூலை 21-ல் பிறந்த அவர் மாநில மற்றும் தேசிய அளவில் முக்கிய தலைவராக உள்ளார். சமூக நீதி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றல், கார்கேவின் மிக முக்கியமான பங்களிப்பு உள்ளது. சமூக சமத்துவக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட கார்கே, சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

2013 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தில் ரயில்வே அமைச்சராக கார்கே நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலத்தில், ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பயணிகளின் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். மேலும் தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள அவர் பாஜக அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.