தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. இதை யொட்டி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இது தவிர அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். இதற்காக இன்று ( புதன்) மதியம் 12-10 மணிக்குஅரக்கோணத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டுமதியம் 1 – 10 மணிக்கு கோவை வந்தார். அங்கிருந்து 1 – 15 மணிக்குபுறப்பட்டு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் 1 – 35 மணிக்கு மேட்டுப்பாளையம் – அன்னூர் நால்ரோடு பகுதியில்அமைக்கப்பட்டிருந்தஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு சென்றார். 1 – 45 மணிக்கு தென்திருப்பதி சாலையில் நடைபெறும் பொது கூட்ட மைதானத்திற்கு சென்றார். ரோட்டின் இரு புறமும் திரண்டு நின்ற பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். அங்கு60 அடி நீளம் 32 அடி அகலம் கொண்ட பிரம்மாண்டமான பொதுக்கூட்ட மேடையில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி எல்.முருகன், கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் வசந்த ராஜன் ஆகிய 3 பேரையும் ஆதரித்து பேசினார். பொதுக் கூட்டத்திற்கு அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டு வந்திருந்தனர்.மாலை 2 -40ஹெலிகாப்டரில் புறப்பட்டு 3 – 10 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார்.பின்னர் அங்கிருந்து மாலை 3 – 15 க்கு தனி விமானம் மூலம்மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் புறப்பட்டார். பிரதமர் மோடி வருகையையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கோவை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரதமரின் தனிப்பிரிவைசேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கோவையில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் இடம் கோவை விமான நிலையத்தில் அவர் வரும் பகுதி ஆகிவற்றை ஆய்வு தொடர்ந்து செய்து வந்தனர்.. மேற்கு மண்டல ஐ ஜி பவானிஸ்வரி, கோவை சரக டி ஐ.ஜி. சரவண சுந்தர் ஆகியோர் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது..பிரதமர் மோடி வருக யை யொட்டி மேட்டுப்பாளையம் அன்னூர் நால்ரோடு தென்திருப்பதி சாலையில் பொதுக்கூட்ட மைதானத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நேற்றும் இன்றும்,டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருநதது..பிரதமர் கோவை வருவதை முன்னிட்டு மாநகரில் வழக்கமாக டிரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளுடன் சேர்த்து கோவை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஹோப்ஸ், சித்ரா சின்னியம்பாளையம், நிலம்பூர், நேரு நகர் காளப்பட்டி விளாங்குறிச்சி சரவணம்பட்டி, எஸ் ஐ .எச் .எஸ் .காலனி வெங்கடாபுரம்,இருகூர் ,ஏ. ஜி. புதூர், நீலி கோணாம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக சிவப்பு மண்டலம் (ரெட் சோன்)பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் நாளை 11 -ம் தேதி இரவு 10 மணி வரை டிரோன்கள்பறக்க தடவிதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையையொட்டி கோவையில்மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.நேற்று இரவு சோதனைச் சாவடிக ளில்விடிய விடிய வாகன சோதனை நடந்தது.வெடிகுண்டு கண்டுபிடிப்புநிபுணர்கள் மோப்பநாயுடன் முக்கிய இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0