கோவை; கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வட சித்தூரில் ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2படித்து வருபவர்ஒரு மாணவர். இவர் வகுப்பறையில் தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்களை உட்கொள்வதாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் விசாரித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத் தனர். பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து தலைமையாசிரியை சந்திக்குமாறு கூறினார்கள் .இதை தொடர்ந்து நேற்று பகல் 11:30 மணிக்கு மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை சந்தித்தனர். பெற்றோர் வந்திருப்பது குறித்தும், பள்ளி தலைமை ஆசிரியர் விசாரணை நடத்துவது குறித்தும் அறிந்த மாணவர் அதிர்ச்சி அடைந்தார். திடீரென்று பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார் .இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த மாணவ – மாணவிகள் ஆசிரியர்கள் அவனை மீட்டு வடசித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத் தனர். இதில் மாணவனின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பள்ளிக்கூட மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0