கோவை; தமிழக பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று ( திங்கள்கிழமை) காலையில் தொடங்கியது. வருகிற 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .அதன்படி கோவை மாவட்டத்தில் 128 மையங்களில் பிளஸ் 2 வகுப்புக்கான பொது தேர்வை 363 பள்ளிகளைச் சேர்ந்த 16, 680மாணவர்கள், 19,319 மாணவிகள் என மொத்தம் 35,999 பேர் எழுதுகிறா ர்கள். இந்த தேர்வை 624 தனி தேர்வர்களும் எழுதுகிறார்கள். பிளஸ் 1 பொதுத் தேர்வு வருகிற 5 – ந் தேதி முதல் 27 – ந் தேதி வரை நடக்கிறது .பிளஸ் 1 பொதுத் தேர்வை 16,949 மாணவர்கள், 19,715 மாணவிகள் என மொத்தம் 36,664 பேர் எழுதுகிறார்கள். 11-ம் வகுப்பு 407 தனித் தேர்வர்களும், தேர்வு எழுத உள்ளனர். 7 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வழித்தட அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் கட்டுகளை கட்டு காப்பு மையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லவும், தேர்வு முடிந்த பின் விடைத்தாள்களை விடைத்தாள் சேகரிப்பு மையத்தில் ஒப்படைப்பு வகையில் 37 வழித்தடங்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தேர்வு பணிக்கு 14 வினாத்தாள் கட்டுக்க ாப்பு அலுவலர்கள், 128 முதன்மை கண்காணிப் பாளர்கள் ,128 துறை அலுவலர்கள் ,37 வழித்தட அலுவலர்கள், காப்பியடிப்பதை தடுக்க 290 பறக்கும் படைகள் ,நிலையான படை அலுவலர்கள் மற்றும் 2.150 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை தேர்வில் எழுத 310 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களை எளிதில் மாணவர்கள் சென்றடைய போதுமான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0