பவானி ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவன் பரிதாப பலி..

கோவை மாவட்டம், சிறுமுகை பக்கம் உள்ள பெல்லே பாளையம் , நால் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் திலக் ரிஷி (வயது 17) சிறுமுகை புதூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1படித்து வந்தார் .இவர் நேற்று தனது நண்பர்களு டன் சிறுமுகை எலகம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது திடீரென்று ஆழமானபகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை ரமேஷ் சிறுமுகை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.