பிளஸ் 1 மாணவன் தூக்கு போட்டு தற்கொலை. கோவை மார்ச் 2 கோவை கணபதி, ராஜீவ் காந்தி ரோட்டில் உள்ள காமகோடி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. வியாபாரி. அவரது மகன் சந்துரு (வயது 16) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார் .கடந்த 29ஆம் தேதி பள்ளிக்குச் செல்லவில்லை. இதைப் பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த சந்துரு இரவில் பெற்றோர்கள் தூங்கிய பிறகு பெட் சீட்டை எடுத்து மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கினார். இதை பார்த்த பெற்றோர்கள் அவரை கீழே இறக்கி மருத்துவமனை எடுத்துச் சென்றனர். வழியில் சந்துரு பரிதாபமாக இறந்தார். இது குறித்து தந்தை பொன்னுசாமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0