ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி உலக அளவில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை கோபிசெட்டிபாளையம் ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் தலைமை வகித்தார். துணை முதல்வர் முனைவர். சி. நஞ்சப்பா முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சுமார் நூறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியினை ஏற்றனர். பின்னர் கல்லூரியின் முதல்வர் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. கிருஷ்ணகுமார், செல்வி. காயத்ரி மற்றும் திரு. சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0