கோவையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி..!.

கோயம்புத்தூர் SNR ஆடிட்டோரத்தில் UYIR கிளப் தன்னார்வலர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 850க்கும் மேற்பட்ட மாணவ தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், டிசி-ட்ராஃபிக் என்.மதிவாணன், கோயம்புத்தூர் சென்ட்ரல் ஆர்டிஓ சத்யகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். மாநகர காவல் ஆணையர் முன்னிலையில் மாணவர்களால் “சாலை பாதுகாப்பு உறுதிமொழி” எடுக்கப்பட்டது. UYIR கிளப் தன்னார்வலர்கள் GKNM மருத்துவமனை – நர்சிங் நிறுவனம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெண்களுக்கான ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, Dr.N.G.P. பயிற்சியில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி உட்பட பல கல்லூரிகள் பங்கேற்றன.