இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமர்த்தும் வழக்கமும் , கடன் பிணையத்தொகை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்கு உரிய குற்றமாக வரைமுறை செய்யப்பட்டுள்ளதால் கொத்தரிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி அரசு அலுவலகங்களில் கொத்தடிமை குறித்த உறுதி மொழியினை அரசு அலுவலகங்களில் எடுக்க அரசு வலியுறுத்தி இருந்தது ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று உறுதிமொழி எடுக்கபட்டது அதன்படி சூலூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் முன்னிலையில் அலுவலக அனைத்து நிலை பணியாளர்களும் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0