நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து நீலகிரி ஒரு குளிர் பிரதேசம் என்பதே கேள்விக்குறியாகி உள்ளது, காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன, வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் அனைத்து குடிநீர் ஏரிகளும் வறண்டு தண்ணீர் குறைவாக உள்ளது, தற்போது பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் மூன்று நாளுக்கு ஒருமுறை 5 நாளுக்கு ஒரு முறை என்ற நிலையில் நகராட்சி விநியோகம் செய்து வருகிறது இயற்கையாகவே மழை பெய்ய வேண்டிய மாதத்தில் பேயாததால் இத்தகைய வறட்சியின் சூழ்நிலை உதகை பல பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று உதகையில் திடீரென்று ஒரு பத்து நிமிடம் மலை கொட்டியது இந்த திடீர் மழையால் உதகை மக்கள் கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று குளிர்ச்சியை ஏற்பட்டுள்ளது, இந்த மலை கனமழைக்கு துவக்கமாக உள்ளதாக இருக்கும் என்று உதகை மக்கள் நம்புகின்றனர், மற்றும் உதகையில் உள்ள விவசாயிகள் தற்போது பெய்த மழையை வரவேற்கின்றன, தொடர்ந்து மழை வருமானால் விவசாயம் இயற்கை வளம் சிறப்பாக இருக்கும் என்று உதகை விவசாயிகள் தெரிவித்தனர், மூன்று மாதமாக வாட்டி வதைத்த கடும் வெயிலினால் உதகை மற்றும் நீலகிரி வனப் பகுதிகள் வறண்டு காணப்பட்டு பல இடங்களில் வனத்தீகளும் ஏற்பட்டன, மலைத்தொடர்ந்து பெய்தால் மட்டுமே வனப்பகுதிகள் காட்டுத் தீயில் இருந்து காப்பாற்ற முடியும், தற்போது பெய்து இந்த சிறிய மழையால் உதகை பல பகுதிகள் சிறிதளவு குளிர்ச்சியாக காணப்படுகிறது, உதகைக்கு வந்து சுற்றுலா பயணிகளும் இந்த சிறிய மழையால் மகிழ்ச்சி அடைந்தனர், இன்று உதகையில் பெய்த மழையால் உதகை மக்களுக்கு மழை வந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0