கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆனைமலை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டுவிளையாடியதாக ஆனைமலை இந்திரா நகரை சேர்ந்த வேலுசாமி ( வயது40 )சோமந்துறை சித்தூர் முத்துராஜ் (வயது 34) ரமேஷ் (வயது 40) கோபால கிருஷ்ணன் ( வயது 32 )ஐயப்பன் ( வயது 56) சோமந்துறை சித்தூர் இம்மானுவேல் (வயது28) ராஜேந்திரன் ( வயது 42) குமார் (வயது41) மணிகண்டன் (வயது 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ 8,100 பறிமுதல் செய்யப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0