வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கை கையாடல். 4 பூசாரிகள் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் தினமும் தரிசனத்திற்கு வருகிறார்கள். இந்த கோவிலில் பூசாரிகளாக பணிபுரிந்து வரும் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் ஆகியோர் பக்தர்கள் வைக்கும் தட்டு கணிக்கையை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.. இதற்கு உடந்தையாக கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர். வசந்தாஇருந்தாராம் .இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோவில் தலைமை பூசாரி ரகுபதி ( வயது 36) உதவி பூசாரிகள் தண்டபாணி (வயது 47) விஷ்ணுகுமார் ( வயது 33) சரவணன் ( வயது 54) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தாவை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.