கோவை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.2-வதுநாளாக நேற்று நடந்தது. இதில் கோவை மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 8 மாவட்டங்களில் உள்ள தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நடந்த உடல் தகுதி தேர்வில் 216 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல் ,400 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் தங்கள் உடல் தகுதியை காட்டினார்கள். அதுபோன்று 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் இலக்கை நோக்கி வேகமாக ஓடினார்கள். அவைகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த தேர்வை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானிஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த 427 பேருக்கு இந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பலர் கலந்து கொண்டு தங்கள் உடல் தகுதி நிரூபித்தனர் .இதில் தேர்வானவர்களுக்கு விரைவில் தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0