நீலகிரி மாவட்ட கூடலூர் நெல்லியாலம் பகுதி அடிப்படை வசதிகளை செய்து தர ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ்ய சபா மாநில தலைவர் எஸ் சசிகுமார் தலைமையில் ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கப்பட்டது,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் பகுதியில் வசிக்கும் தினக்கூலி ஏழை மக்கள் அப்பகுதியில் சொந்த வீடு இல்லாமல் வசித்து வருகின்றன, இவர்களுக்கு சொந்த நிலமும் வீடு இல்லாத பட்சத்தில் இவர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டித்தர கோரிக்கைகள் முன் வைத்திருக்கிறார்கள், மற்றும் சிலருக்கு வீட்டுமனை பட்டா இருந்தும் வீடு கட்டித்தர கோரிக்கை மனு தரப்பட்டுள்ளன, பந்தலூர் நெல்லியாலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் மக்களுக்கு சரியாக செய்து தரப்படாமல் உள்ளதை இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ்ய சபா கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் நிர்வாகிகள் பலமுறை நகராட்சியை வலியுறுத்தி கேட்டும் அப்பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் கால்வாய் குடிநீர் குழாய்கள், தெருவிளக்கு கழிப்பிடங்கள், போன்ற மக்களின் அடிப்படை வசதிகளை ஏன் இன்னும் செய்து தராமல் பல வருடங்களாக தாமதமாய் உள்ளதை கண்டித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் எங்களது கோரிக்கை மனுவை நேரில் சந்தித்து கொடுத்துள்ளோம், மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதனைப் பெற்றுக் கொண்டு கண்டிப்பாக
அந்த இடத்திற்கு ஆய்வு மேற்கொண்டு பட்டா வழங்கக்கூடிய இடங்களில் தனியார் கடைகள் உள்ளதால் அதற்கான ஜியோ பாஸ் பண்ணி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மற்றும் இடம் உள்ளவர்களுக்கு எந்த திட்டத்தில் அவர்களுக்கு வீடு கட்டு கொடுக்கக்கூடிய முறையில் செய்ய அதற்கான துறையை அணுகி கட்டித் தரப்படும் என்று கூறினார்கள், மற்றும் தனிப்பட்ட முறையில் அடிப்படை வசதிகள் தேவைகளை குறித்து மனுக்களை தாராளமாக கொடுங்கள் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள், உதகை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க RGPRS மாநிலத் தலைவர் S. சசிகுமார், மாநில துணைத்தலைவி சுபத்ரா தேவி, நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, ஜோதி, லதா, கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரவேல், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமாறன், திருச்சி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரி, சுமதி, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி ஒருங்கிணைப்பாளர் S.டில்லிகுமார், அரக்கோணம் நகராட்சி ஒருங்கிணைப்பாளர் D. டேவிட் தினகரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்