கோவை மாணவ,மாணவியரிடம் சாதி,மதம் கேட்கும் தனியார் பள்ளி நிர்வாகம் மேல் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒருசில தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களிடம் விபரக் குறிப்பேட்டில் சாதி, மத விபரங்களை கட்டாயம் தெரிவிக்கும்படி வற்புறுத்தியத்திற்கு எதிராக உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), ஆகியோரிடமும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திலும் முறையிடப்பட்டது.

அதன் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்),வெளியிட்ட அறிக்கையில் மாணவர்கள் மத்தியில் சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் அறிவியல் முன்னேற்றமடைந்துள்ள இக்காலத்திய குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக உள்ள சாதி, மதம் சார்ந்த அடையாளங்களை பள்ளி மாணவர் களின் வீட்டுப்பாட குறிப்பேடு, சுய விவரப்படிவத்தில் குறிப்பிடக் கூடாது என்று அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.” என தெரிவித்தனர். ஆனால் இதனை மீறி ,கோவையில் உள்ள , பீளமேடு பி.எஸ்.ஜி மெட்ரிகுலேசன் பள்ளி, சித்தா புதூர், பி.ஆர்.சித்தாநாயுடு மெமோரியல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, சொக்கம் புதூர் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி, புளியங்குளம் வித்யா நிகேதன், காரமடைசிறீ வித்ய விகாஸ், இரத்தினசபாபதிபரம் நேரு வித்யாலயா, சின்மயா வித்யாலயா, உள்ளிட்ட பெரும் பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களின் விபரக் குறிப்பேட்டில் மாணவர்களின் சாதி/மத விபரங்களைக் குறிப்பிடும் வகையில் படிவங்களை உருவாக்கி, கட்டாயமாக தெரிவிக்கும்படி வற்புறுத்தி வருவதாக அறிந்து அதிர்ச்சியாக இருந்தது.

இதுபோன்ற செயல் முற்றிலும் சட்ட விரோதமானதாகும். எனவே பள்ளிகளின் நிர்வா கத்தின் மீது மாவட்ட ஆட்சியர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என்றனர், இதில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுசெயலாளர் கு. ராமகிருஷ்ணன்,
தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழக, தலைவர் மா.நேருதாஸ்,தலைமையில் திராவிடர் கட்சி புரட்சிகர இளையர் முன்னணி , [விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ,தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் உடன் மனு அளித்தனர்.