கோவை சிறுவாணி அடிவாரம் காருண்யா நகரைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் 7 பேர் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை நிறுவன தலைவர் வக்கீல் புஷ்பானந்தம் தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நாங்கள் மேற்கண்ட முகவரியிலும் மற்றும் ஆனைகட்டி வன் பகுதியிலும் வசித்து வருகிறோம். நாங்கள் 7 பேரும் கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கோவை வனச் சரகத்தில் பல்வேறு இடங்களில் வேட்டை தடுப்பு காவலர்களாக நாங்கள் அனைவரும் தற்காலிகமாக 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்தோம். எங்களது அன்றாட பணி யானையை விரட்டும் பணியாகும். எங்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் குடும்பங்கள் உள்ளது. கோவை மாவட்ட வன அதிகாரி எங்களுக்கு அவர்களின் உத்தரவின் பேரில் தகுந்த முன்னறிவிப்பின்றி எந்தனித தகவலும் சொல்லாமல் திடீரென்று வனத்துறையில் அரசு நிதி இல்லை என காரணம் காட்டி எங்கள் அனைவரையும் வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள். தற்போது நாங்கள் வேலை இல்லாமல் சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் மிகவும் கஷ்டமாக
வருகிறோம். ஆகவே எங்கள் 7 பேருக்கும் மீண்டும் வனவேட்டை தடுப்பு காவலர்கள் பணி திரும்ப கிடைக்க உதவி செய்யும்படி கலெக்டரிடம் மனுவில் தெரிவித்திருந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0