நீலகிரி மாவட்டம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 210 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து
வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், குடிசை மாற்று வாரிய வீடு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 210 மனுக்களை பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் கொட்ரகண்டி பகுதியைச் சேர்ந்த மோகன்
என்பவர் தனது மகனின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மனு அளித்ததை தொடர்ந்து, இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை
ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கல்பனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யின நல அலுவலர் சுரேஷ்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கண்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.