ஆவடி காவல் ஆணையரகத்தில் மக்கள் குறை கேட்பு முகாம். 84 புகார் மனுக்களைப் பெற்று போலீஸ் கமிஷனர் சங்கர் மக்கள் குறைகளை கேட்டு அறிந்தார் ஆவடி காவல் ஆணை ரகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மக்கள் குறை கேட்பு முகாம் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் நடந்தது. திருமுல்லைவாயில் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்சன் சென்டரில் 84 புகார் மனுக்களை கமிஷனர் சங்கரிடம் கொடுத்து தங்களது குறைகளை சொல்லி அழுதனர். இக்குறை தீர்க்கும் முகாமில் போலீஸ் துணை ஆணையர்கள் உதவி ஆணையர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பெண்கள் தங்களது கைக்குழந்தைகளோடு கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கமிஷனர் சங்கரிடம் அழுது புலம்பினர். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மக்கள் குறை கேட்பு நடைபெறும். அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பிரச்சனைகள் குறித்து மனுக்கள் கொடுத்து தீர்வு காணலாம் என போலீஸ் கமிஷனர் சங்கர் கூறியுள்ளார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0