திருச்சி அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கான சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் இல்லை இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியனிடம் கேட்ட போது திருச்சிக்கு விரைவில் புற்றுநோய்க்கான மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். எத்தனையோ சிறப்பான துறைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் இருந்தாலும், இதய அறுவை சிகிச்சை புற்றுநோய்க்கான ரேடியோதெரபி கீமோதெரபி புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை வசதிகள் இல்லை. இதனால் நோயாளிகள் தஞ்சாவூர், மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்து வமனை டாக்டர்கள் இது பற்றி தெரிவித்த போது கடந்த 2015ம் ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான ரேடியோதெரபி சிகிச்சை துவங்க அரசாணை வெளியிடப்பட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கான ஆன்காலஜி சிகிச்சைக்காக, பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 64 பேர் நியமிக்கப்பட வேண்டும்.அதேபோல, இதய சிகிச்சை துறையில் கேத் லேப் வசதி இங்கு இருப்பதால் இதய அடைப்புக்கான ஆஞ்சியோ பரிசோ தனை ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதய ரத்த குழாய் களில் அதிக எண்ணிக்கையிலான அடைப்பு இருந்தால் செய்யப்படும் ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை துறை திருச்சி அரசு மருத்துவமனையில் இல்லை. இதற்கு, கார்டியோ தொராசிக் சிகிச்சை நிபுணர்கள் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். சில மாதங் களுக்கு முன் திருச்சி வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திருச்சி யில் புற்றுநோய் மற்றும் இதய அறுவை சிகிச்சை பிரிவு விரைவில் துவங்கப்படும் என்றார். எனினும் இன்னும் துவங்கப்படவில்லை.புற்றுநோய்க்கு தஞ்சாவூரில் கதிர்வீச்சு சிகிச்சை பெறும் பாலக்கரையை சேர்ந்த அருள் என்பவர் கூறும்போது தஞ்சாவூரில் இதற்கான சிகிச்சை வழங்கப்படுவதால் அங்கு தினமும் சென்று கதிர்வீச்சு சிகிச்சை பெறுகிறேன். திருச்சியில் இந்த சிகிச்சை வசதி இருந்தால் ஏழை நோயாளிகளுக்கு மிகவும் உதவிக்கர மாக இருக்கும். மேலும் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் மதுரைக்கு புற்றுநோய் சிகிச்சைக் காக பொதுமக்கள் செல்வது மிகுந்த சிரமகத்திற்கு உள்ளதாக இருக்கிறது சுகாதாரத்துறை அமைச்சர் விரைவாக செயல்பட்டு திருச்சி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை தொடங்கி வைப்பார் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0