ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து நோயாளி பலி..

கோவை :திருப்பூர் மாவட்டம் பல்லடம், சிற்றம்பலம் பிரிவு, கோல்டன் சிட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 41 )இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மாதம்தோறும் சிகிச்சைக்காக வருவார். நேற்று சிகிச்சை முடிந்து சிங்காநல்லூர் பஸ் நிலையம் செல்வதற்காக டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். வரதராஜாபுரம் மில் பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்ற போது ஓடும் பஸ்சிலிருந்து திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் இவரது தலையில் பஸ் சக்கரம் ஏறி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது மனைவி மஞ்சுளா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.