கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் பலர் பலியானர்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோவை உக்கடத்தை சேர்ந்த பாட்ஷா கைது செய்யப்பட்டார். “அல் உம்மா” இயக்க தலைவர் பாஷா கடந்த 3 மாதங்களாக பிணையில் உள்ளார். இந்த நிலையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு நேற்று கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவரது உடல் உக்கடம், பொன் விழா நகர் ரோஸ் அவென்யுவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை யொட்டி கோவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0