நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், நீலகிரி மாவட்டத்திலிருந்து மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாணவ, மாணவி யர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.01.2025) நேரில் வாழ்த்து தெரிவித்து, மாணவ, மாணவியர்கள் செல்லும் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களின் கலைத்திறனை
வெளிப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டாரம், மாவட்டம் மற்றும்
மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்த ஆணையிட்டதை தொடர்ந்து, மாவட்ட முழுவதும் கலைத்திருவிழா போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது,
அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் வட்டார அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மாநில அளவில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர், நீலகிரி மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 429 மாணவ, மாணவியர்கள் மாநில அளவில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளார்கள், குறிப்பாக, மாணவ – மாணவியர்களுடன் அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் செல்ல அனைத்து ஏற்பாடுகளும், போக்குவரத்து வசதிகளும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால், நீலகிரி மாவட்டத்திலிருந்து மாநில அளவில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்து, மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) நந்தகுமார், மாவட்ட கல்வி அலுவலர் / உதவி திட்ட அலுவலர் அர்சுணன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு வழி அனுப்பி வைத்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0