கோவை: தீபாவளி பண்டிகை வருகிற 31- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே புது துணிகள், நகைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கோவை பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, ஆர் .எஸ் . புரம்உள்ளிட்ட கடை வீதிகளில் ஜவுளி கடைகளில் புது துணிகள் மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. சாதாரண நாட்களை விட சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மக்கள் நடமாடவே சிரமப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே கடைவீதிகளில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல வசதியாகவும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார். அதன்படி மக்கள் அதிகம் கூடும் கடைவீதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .அதே பகுதியில், டவர்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். பொதுமக்கள் தங்கள் உடமைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும.சாலையை கவனமாக கடக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவரிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். என்று போலீசார் ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் ஒப்ணக்கார வீதியின் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பொதுமக்களால் நடந்து செல்ல முடியவில்லை அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் வந்தது இதை தொடர்ந்து ஒப்பணக்கார வீதியில் மக்கள் கூடும் இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் வகையில் போலீசார் கயிறு கட்டி உள்ளனர். அதை மீறி அங்கு வானங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல வசதியாக தடுப்பு வைத்து போலீசார் தனி வழி ஏற்படுத்தி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஓரளவு குறைந்து உள்ளது. மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுவோர்களை பிடிக்க 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது இவர்கள் மாறுவேடத்தில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0