பெற்றோர் ஆசிரியர்க் கலந்தாய்வு கூட்டம்

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர்க் கலந்தாய்வு கூட்டம் 18.05.2024 (சனிக்கிழமை) அன்று கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கல்லூரியின் செயலாளரும் மற்றும் பவானி சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமான திரு.கே.சி.கருப்பணன் அவர்கள் கலந்துகொண்டு தலைமை தாங்கி உரையாற்றினார். அவரது உரையில் மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்றால்தான் தொழிற்துறை வல்லுனராக முடியும் என்றும் பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டு படிக்கவைப்பதால் தங்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று கூறினார். மேலும், கல்லுரியில் படிக்கும்போதே திறன் சார்ந்த படிப்பினையும் சேர்த்து படிக்க வேண்டும் அவ்வாறு படிக்கும்போது கல்லுரி இறுதி ஆண்டில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பினை பெற முடியும் என்று கூறினார். இக்கூடத்தில் அண்ணா பல்கலைக்கழகம் NOV/DEC 2023 தேர்ச்சி சதவீதம், மாணவர்களின் கற்றல் திறன், வகுப்பறையில் மாணவர்களின் செயல்பாடுகள், வருகை பதிவு, வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி, புதிய தொழிற்நுட்ப பயிற்சி, மத்திய மாநில வேலைவாய்ப்பு பயிற்சி, பன்னாட்டு மொழித்திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு வழங்கிய கம்பெனிகள் மற்றும் ஊதிய விவரம் பற்றி ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.தங்கவேல் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லுரியின் அறக்கட்டளை உறுப்பினர் திரு.கே.ஆர்.கவியரசு மற்றும் துறைத்தலைவர்கள் கலந்துகொண்டனர். கல்லூரியின் துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கற்றலில் பின்னடைவுள்ள மாணவர்களை, கற்றலை மேம்படுத்தும் வழிகளைக் கூறி பெற்றோருடன் கலந்து ஆலோசித்தனர். இக்கூடத்தின் இறுதியாக கணிப் பொறியியல் துறைத் தலைவர் முனைவர் டி.செந்தில் பிரகாஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.