நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கெராடாமட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கவிதா.இவர் 2004 இல் பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் தற்போது வரை 20 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். கிராம புற மாணவர்களுக்கு புரியாத ஆங்கில பாடத்தை எளிமையாகவும் தொழில்நுட்ப முறையில் புதுமையாகவும் கற்றுத் தருகிறார். பொருள் புரியாத ஏழை குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் விளக்கியும் கூறி வருகிறார். அன்புடன் கூடிய கண்டிப்பு , அரவணைப்பு டன் விளங்கும் ஆசிரியை கவிதா அனைத்து மாணவ மாணவிகள் , பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பை பெற்றவராக , அனைவரும் விரும்ப கூடிய சிறந்த ஆசியையாக உள்ளார். மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு, ,யோகா பயிற்சியும், கணினியும் கற்றுத் கொடுத்து வருகிறார். கலைத் திருவிழா நிகழ்ச்சியில் பேச்சு, கட்டுரை, ஓவியம், பாடல் ,நடனம் உள்ளிட்ட பல போட்டிகளில் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வெற்றி பெற செய்து இருக்கிறார். கல்வி இணையத் தளமான எமிஸ் பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார். இவ்வாறாக கற்பித்தல் பணியோடு கல்வி இணைச் செயல்பாடுகளிலும் சிறந்து வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்வித் துறையானது முன்னாள் மாணவர் சங்கத்தை பள்ளியில் நிறுவ ஏதுவாக குறைந்தது 25 முன்னாள் மாணவர்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு ஆணையிட்டது. ஆசிரியை கவிதா 75 முன்னாள் மாணவ மாணவிகளை இதில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில் கேட்கப்பட்ட வினாவான ‘உனக்கு பிடித்த ஆசிரியர் பெயர்’ என்ற இடத்தில் அனைத்து மாணவர்களுமே கவிதா ஆசிரியையை பதிவிட்டு உள்ளனர். இது பள்ளிக்கல்வி துறை அலுவலர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அதற்காக சென்னையில் இருந்து அழைப்பு வந்து , விழுதுகள் என்ற பெயரில் பள்ளியின் மேம்பாட்டிற்காகவும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் சிறப்பாக தொடர்ந்து பாடுபட்டு வரும் ஆசிரியை கவிதாவுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி முன்னாள் இயக்குனர் சுதன் அவர்கள், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்திற்கு இத்தகைய பெருமையை தேடித் தந்த ஆசிரியை கவிதாவுக்கு குடியரசு நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள்,மாணவ மாணவிகள் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0