சென்னையில் இருந்து கோவைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப் பெட்டியில் 2 வயது பெண் குழந்தை கேட்பாரற்று தூங்கிக் கொண்டிருந்தது. இது குறித்து கோவை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஏட்டு ராஜேந்திரன், பெண் போலீஸ் ரம்யாஆகியோர் சென்று ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த குழந் தையை மீட்டனர். குழந்தைக்கு உணவும், மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது. பின்னர் அந்த குழந்தை கிணத்துக்கடவு குழந்தைகள் சரணாலயம் அன்பு இல்லத்தில் ஒப்படைக் கப்பட்டது. 2 வயது பெண் குழந்தையை ரயில் பெட்டியில் அனாதையாக தவிக்க விட்டு சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..