கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கோவை மாநகர் பகுதி மற்றும் ஊரகப் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று மழை பெய்வதற்கு முன்பு உடையாம்பாளையம் அடுத்து உள்ள காந்திநகர் பகுதியில் பலத்த காற்று வீசியதால் வீட்டின் மேற்கூரை அந்தரத்தில் பறந்து வந்து மின் கம்பியின் மேல் நின்றது. இதனால் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தானியங்கி மின் கருவி செயல்பட்டு அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் தீ விபத்து, உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அந்தரத்தில் பறந்து வந்து மின் கம்பத்தில் நின்ற மேற்கூறையை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0