ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம்.!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அவர்கள் தனது சாய்ராம் நிறுவனம் மூலம் கல்லால் குழுமத்திடம் இருந்து 8 கோடியே 50 லட்சம் ரூபாயை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த தொகையை உடனடியாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரவீந்திரநாத்துக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பே சென்னையில் அமலாக்கத்துறையினர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ஒருவர் வீட்டிலும், எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள உதயநிதி ரசிகர் மன்றம் மற்றும் அறக்கட்டளை அலுவலகம் நடத்தி வரும் வழக்கறிஞர் பாபு என்பவரின் அலுவலகத்திலும் சோதனை நடத்தி இருந்தனர்.

அதன் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கில் இருந்த 34.7 லட்சம் ரூபாயை நேற்று அமலாக்க துறையினர் முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.