கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மாதம்பட்டி. மேல் சித்தரை சாவடி, தென்மநல்லூர், பூலுவபட்டி, ஆலாந்துறை. மத்துவராயபுரம் மற்றும் செம்மேடு போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விளை நிலங்களிலும் , நொய்யல் நதிக்கரை ஓரத்திலும் உயர் மின் கோபுரம் வழித்தடம் அமைக்க விவசாயிகள் எந்தவொரு அனுமதியில்லாமல் மின்சாரிய வாரியம் திட்டமிட்டு செயல்படுவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி விவசாயிகளுடன் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
தொடர்ந்து பேசிய விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி பேசுகையில், விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க என்பதற்கான முழு விளக்கமும் இதுவரை மின்சார வாரியம் தெரிவிக்கப்படவில்லை. பல விவசாயிகளிடம் மின்சார வாரியம் அனுமதி பெறாமல் விவசாய பூமிக்குள் மின்சாரம் செல்ல மின்சார பணிகள் மேற்கொள்ளுகின்றனர் , இதை உடனடியாக அப்புறப்படுத்தி தர வேண்டும் என்றார்.
ஆனால் விவசாயிகளை மின்சார வாரிய அதிகாரிகள் அடிக்கடி மிரட்டி வருகிறார்கள். இதனால் திடீரென அமைக்கபட்டு வரும் மின்கோபுரத்தால் பல விவசாயிகளின் நிலங்கள் பாதிக்கப்படுவதோடு பல லட்சம் ரூபாய் பொருளாதார நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது அது மட்டுமல்ல தற்பொழுது விவசாய பூமிகளில் பாக்கு, தென்னை, மஞ்சள், வாழை மற்றும் மிளகாய் போன்ற நீண்டகால பலவகை பயிர்களை வைத்திருக்கிறார்கள் இவ்வற்றை உடனே அகற்றப்படுத்த விவசாயிகளிடம் மின்வாரியம் தெரிவிப்பதால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைகிறார்கள்.
அதே போல நொய்யல் நதிக்கரையின் வழியாகவும், நீர் செல்லும் பாதையிலும் உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதால் நதி ஆக்கிரமிப்புகளை மீட்கவும் பெரும் வெள்ளம் காலங்களில் நீர் நொய்யல் நதியில் சீராக செல்லவும், இடையூறாக இத்திட்டம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்றார்.
இத்திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்களையும் நொய்யல் நதிக்கரை ஓரங்களையும் சேதப்படுத்தி மின்சார வாரியம் உயர் மின் அழுத்த கோபுரம் அமைத்து மின்சாரம் கொண்டு செல்ல மாற்று வழியில் செயல் பட வேண்டும் என்றார்
எந்தவித முன்னறிப்பும் இன்றி விவசாய நிலங்களில் அமைக்க இருக்கும் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறும், விவசாயிகளும் விவசாய பயிர்களையும் பாதுகாத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியரை நேரில் சநதித்து புகார் மனு அளித்தோம் என்றார்
மேலும்,விளை நிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பது சம்பந்தமாக விவசாயிகளை மின்வாரியம் அழைத்து மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் கூட்டம் நடத்தி இத்திட்டத்தின் நோக்கங்களை விவசாயிகளும் விளக்க வேண்டும் என்றும் விவசாயிகள் அனுமதி இல்லாமல் திட்டம் அமைக்க கூடாது என்றும் தெரிவித்தார்கள்.