ஆதார் கார்டு மட்டும் போதும்.. ரூ.50,000 வரை கடன் உதவி!! மத்திய அரசு அறிவிப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பயன்பெறும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ஆதார் கார்டு மட்டும் வைத்து வியாபாரிகளுக்கு 50,000 ரூபாய் வரை கடனுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. சிறு , குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் தொழில்களுக்கு நிரந்தர உத்தரவாதம் என்பது யாராலும் கொடுக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்களுக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ” பிரதான் மாதிரி ஸ்வநிதி யோஜனா ” திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என்றும் அதனை சரியாக திருப்பி செலுத்துபவர்களுக்கு அடுத்தபடியாக 20,000 ரூபாய் கடனாக வழங்கப்படும் என்றும் அதனையும் சரியாக திருப்பி செலுத்துபவர்களுக்கு 50,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்றும் இத்திட்டத்தின் கீழ் கூறப்பட்டிருந்தது. இந்த கடன்களை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசமாக 12 மாதங்கள் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை :-

பொதுத்துறை வங்கி அல்லது கிராமப்புற பொதுத்துறை வங்கிகளில் சிறு குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் தங்களுடைய ஆதார் அட்டையை பயன்படுத்தி விண்ணப்பிக் கலாம் என கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆதார் அட்டையில் செல்போன் நம்பரை இணைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பரிந்துரை கடிதம் ஒன்றிணையும் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.