எதிர்காலத்தை முன்னரே கணித்த தீர்க்கதரிசிகளில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் பிரான்ஸை சேர்ந்த நோஸ்ட்ராடாமஸ்.
இவர் தொடர்பான புத்தகத்தை கவிதை வடிவில் அவர் எழுதி வைத்துள்ளார்.
465 வருடங்களுக்கு முன் எழுதிய நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா இரட்டை கோபுரத் தாக்குதல், அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி கொலை போன்ற பலவற்றை முன்னரே நோஸ்ட்ராம்டாமஸ் கணித்திருக்கிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அடுத்த 60 நாட்களுக்கு பெரிய ஆபத்துகள் இருப்பதாக கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள சூழ்நிலையில் அணு ஆயுதம் வெடிக்கும் என்று நாஸ்ட்ர்டாமஸ் தனது கணிப்பில் கூறியது கவலையை தருவதாக அமைந்துள்ளது.
மேலும் 3ம் உலக போர் 7 மாதங்கள் நீடிக்கும்.
இதில் லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும்.
பூமியின் வரைபடத்தில் பல நாடுகள் மறைந்துவிடும், மீதமுள்ள மக்கள் புதிதாக வாழ்க்கையைத் தொடங்குவார்கள் என கூறி உள்ளார்.
பல நாடுகளுக்கு இடையே போர் நடக்கும். இதில் ஏராளமானோர் இறக்க நேரிடும்.
அந்த நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய இயற்கை நிகழ்வின் காரணமாக, உலகமே 3 நாட்களுக்கு இருளில் மூழ்கும்.
அப்போது, உலக நாடுகளில் தொடங்கிய போர் திடீரென நின்று விடும்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, உலகம் வெளிச்சத்தைக் காணும்போது மனிதகுலம் மீண்டும் கற்காலத்தில் இருந்து வாழ்வைத் தொடங்கும் நிலையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.