கோவையில் ஆன்லைன் லாட்டரி வியாபாரம். அண்ணன் – தம்பி கைது.

கோவை ரத்தினபுரி போலீசாருக்கு நாராயண சாமி லே அவுட் 2வது கிராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆன்லைன் லாட்டரி விற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் 2 பேர் சேர்ந்து ஆன்லைன் லாட்டரி விற்பனை யில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நாராயண சாமி லே அவுட் 2வது கிராஸ் பகுதியை சேர்ந்த கண்ணன் (33) மற்றும் அவரது அண்ணன் ராஜசேகர் (37) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி விற்பனை மூலம் கிடைத்த 26 பவுன் தங்க நகை, 2 செல்போன் ஆகியவறை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.