அதிகரித்து வரும் ஆன்லைன் குற்றங்கள் – டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை..!

கோவை,-”இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

படித்தவர்களை கூட எளிதில் ஏமாற்றி விடுகின்றனர். அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை 45 ஆயிரம் இணைய வழி குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இத்தகைய மோசடிகளில் பணம் வெளி மாநிலம் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறது. அப்படி வெளிநாட்டுக்கு சென்று விட்டால் அந்த பணத்தை மீட்பது மிகவும் சிரமம்; கால தாமதம் ஆகும்.இவ்வாறு டி.ஜி.பி. தெரிவித்தார்.

டி.ஜி.பி., கூறுகையில், ”வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கொண்டு வரப்படுவதை கண்காணித்து தடுக்க, சோதனைச் சாவடிகள் செயல்படுகின்றன. கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்படுவதை தடுக்க, ஆறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தென்காசி, பொள்ளாச்சி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய சுங்கச்சாவடிகளிலும் நவீன கேமரா நிறுவும் திட்டமும் தயார் நிலையில் உள்ளது,” என்றார்.