போலீஸ் ஏட்டை தாக்கிய 2 பேருக்கு ஒரு ஆண்டு ஜெயில்.

கோவை ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தயிரிட்டேரி ரோடு, அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ஆகாஷ் (வயது 22)விகாஸ் ( வயது 24) இவர்கள் இருவருக்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவருக்கும் இடையே கடந்த 2020- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பட்டாசு வெடிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கடந்த 16- 11. 2020 அன்று ரத்தினபுரி காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு பாபு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் வீரப்பன் ஆகியோர் பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆகாஷ் மற்றும் விகாஸ் இருவரும் போலீஸ் ஏட்டு பாபுவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன். கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஏட்டு பாபு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து ஏட்டு பாபு ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் ஆகாஷ், விகாஸ் ஆகிரு வரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு கோவை 4- வது கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி போலீஸ் ஏட்டு பாபுவை தாக்கிய ஆகாஷ் மற்றும் விகாஸ் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது .இந்த வழக்கில் அரசு தலைப்பில் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜர் ஆனார்..