டெல்லி : ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம் என்பதே நமது நோக்கம் எனவும், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தி தேவை இரு மடங்கு அதிகரிக்கும் என சஉலகின் நீடித்த வளர்ச்சிக்கான உச்சி மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
உலகளாவிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சூரிய மின்சக்தி கட்டங்களின் முதல் சர்வதேச வலையமைப்பான கிரீன் கிரிட்ஸ் முதல் முயற்சியாக, சன் ஒன் வேர்ல்ட் ஒன் கிரிட் (GGI-OSOWOG) என்ற அமைப்பு உள்ளது.
இந்த அமைப்பினை ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் இணைந்து தொடங்கி வைத்திருந்தார். தொடர்ந்து இந்த அமைப்பு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று, உலகின் நீடித்த வளர்ச்சிக்கான உச்சி மாநாட்டில் பிரதமர் தொடக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எனது 20 ஆண்டு கால ஆட்சியில், முதலில் குஜராத்தில் மற்றும் இப்போது தேசிய அளவில் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவை தான் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளாக உள்ளன எனவும், கிரகம், இயற்கையின் மீதான நமது அர்ப்பணிப்புகளும் பலவீனமானவை. 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டிலிருந்து கடந்த 50 ஆண்டுகளில் நிறைய பேசப்பட்டுள்ளது. மிகக் குறைவாகவே செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் நாங்கள் பேசாமல் செய்து காட்டினோம் என்றார்.
ஏழைகளுக்கு சமமான எரிசக்தி அணுகல் என்பது நமது சுற்றுச்சூழல் கொள்கையின் மூலம்m என்ற பிரதமர், உஜ்வாலா யோஜனா மூலம், 90 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு சமையல் எரிபொருளுக்கான அணுகல் வழங்கப்பட்டுள்ளது எனவும், PM-KUSUM திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை எடுத்துச் சென்றுள்ளோம் என்றார். சோலார் பேனல்களை அமைத்து, அதைப் பயன்படுத்தவும், உபரி மின்சாரத்தை கிரிட்க்கு விற்கவும் விவசாயிகளை ஊக்குவிக்கிறோம். தனித்த சோலார் பம்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள பம்புகளை சோலாரைஸ் செய்வதற்கான முயற்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன எனவும் பிரதமர் பேசினார்.
காலநிலை நீதி மூலம் மட்டுமே சுற்றுச்சூழல் நிலைத்தன்மை சாத்தியமாகும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தித் தேவை இரு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை மறுப்பது கோடிக் கணக்கானவர்களின் வாழ்க்கையை மறுப்பதற்கு சமமாகும். வெற்றிகரமான காலநிலை நடவடிக்கைக்கு போதுமான நிதியுதவியும் தேவை. இதற்கு, வளர்ந்த நாடுகள் நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
சர்வதேச சோலார் கூட்டமைப்பின் வாயிலாக, ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம் என்பதே நமது நோக்கம் எனவும், எப்போதும் உலகளாவிய கட்டமைப்பிலிருந்து தூய்மையான ஆற்றல் கிடைப்பதை உறுதிசெய்ய நாம் பணியாற்ற வேண்டும் என அந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கவுரையாற்றினார்.