ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு

கோவை கருப்பண்ண வீதியைச் சேர்ந்தவர் ஆனந்த் ( வயது 42) நேற்று தனியார் டவுன் பஸ்சில் சாய்பாபா காலனி,மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனை முன் பஸ் சென்றபோது ஓடும் பஸ் சில்இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில்பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது தாயார் லட்சுமி கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்துவிசாரணநடத்தி வருகிறார்.