கோவை மாவட்டம் கோமங்கலம் பக்கம் உள்ள பூசாரிப்பட்டியில் பொழுதுபோக்கு கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோமங்கலம் போலீசுக்கு தகவல் வந்தது சப்-இன்ஸ்பெக்டர் ரபீனா மரியம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக உடுமலை மீனாட்சி நகரை சேர்ந்த ஹரிதாஸ் (வயது 48) பொள்ளாச்சி பிரசாத் ( வயது 30) பாப்பன்குளம் குமரேசன் (வயது49) பொள்ளாச்சி பகவதி (வயது 70) செந்தில்நாதன் ( வயது 43) உடுமலை பாபு (வயது 55) பழனியாண்டி புதூர்காளிமுத்து ( வயது 43) திண்டுக்கல் வேடசந்தூர் விஜயகுமார் ( வயது49) கொங்கல் நகரம் கனகராஜ் (வயது 67) தளி முத்துசாமி ( வயது 78 ) கோலார் பட்டி ராமசாமி (வயது 75 )ஜமீன் முத்தூர் சுரேஷ்குமார் ( வயது 46)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூதாட பயன்படுத்தப்பட்ட சீட்டுகளும் ,21 டோக்கன்களும்பறிமுதல் செய்யப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0