ஒரே நாடு ஒரே தேர்தல் சவாலே! சாத்தியமே!! என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம்…

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் அ மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வணிகவியல் துறையின் தலைவர் முனைவர் சி நஞ்சப்பா வாழ்த்துரை நல்கினார். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ர.செந்தில் ராணி அவர்கள் பட்டிமன்ற நடுவராக இருந்தார். மேலும் இவ் விழாவில் வணிகவியல் துறையின் மாணவ மாணவியர் சாத்தியமே என்ற தலைப்பில் உமாமகேஸ்வரி தலைமையிலான அணியினர் தீபா, யாசிகா, ஹரிபிரசாத், பந்தள பாலா ஆகியோரும் ஒரே நாடு ஒரே தேர்தல் சவாலே என்ற தலைப்பில் கலைச்செல்வன் தலைமையிலான அணியினர் சூரியகுமார், ஏஞ்சல், கவிதா, சிவ விக்னேஷ் ஆகியோரும் வார்த்தைகளால் மோதினர். நடுவர் நகைச்சுவை உணர்வோடு பட்டிமன்றத்தை நடத்தியது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்தது. இறுதியில் ஒரே நாடு ஒரே தேர்தல் சவாலே என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார். இவ்விழாவில் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இரண்டாமாண்டு மாணவி நித்யகல்யாணி வரவேற்றார். இறுதியாக மாணவி ஞானசௌந்தர்யா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜெ.லாவண்யா மற்றும் துறைப்பேராசிரியர்கள் செய்திருந்தனர்.