கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரா மெடிக்கல் சைன்ஸ் பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரியில் ஓணம் திருவிழா கடந்த வாரம் புதன் கிழமை 23.8.2023 அன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள கலியன் காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து சாலை மார்க்கமாக கல்லூரி வரை மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்தும்,மகாபலி மற்றும் புலி வேடமிட்டு ஊர்வலமாக வந்தனர். மேலும் கல்லூரியில் கேரள மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டும்,பாரம்பரிய செண்டை மேளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இவ்விழாவிற்கு தலைமை ஏற்று கல்லூரியின் செயலாளர் திரு.கே. சி கருப்பணன் அவர்கள் (பவானி சட்டமன்ற உறுப்பினர்), கல்லூரியின் தலைவர் திரு. பி.வெங்கடாசலம் அவர்கள், கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.ஜி கௌதம் அவர்கள், கல்லூரியின் இயக்குனர் திரு. கவியரசு ஆகியோர் பங்கேற்றனர்.விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். கல்லூரியின் முதல்வர் திரு. நந்தகுமார் ராமசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார். முடிவில் துணைமுதல்வர் பேராசிரியர் திருமதி வனிதா அவர்கள் நன்றி உரை யாற்றினார்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0