தீபாவளி பண்டிகையை யொட்டி கோவையில் நள்ளிரவு 1மணி வரை வியாபார நிறுவனங்கள் செயல்பட அனுமதி.

கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில் உள்ள கடைவீதிகளில் தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்டம் நெரிசலை தவிர்ப்பதற்க்கும் அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவன ஊழியர்களின் அன்றாட வேலை பாதிக்காத வகையில் கடைவீதிக்கு சென்று பொருள்கள் வாங்கு வதற்கும், வசதியாக கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் விற்பனை நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தீபாவளி பண்டிகை வரை கோவை மாநகரில் உள்ள அனைத்து வியாபார தளங்களும் வழக்கமான நேரத்தை விட கூடுதலாக நள்ளிரவு 1 மணி வரை செயல்பட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பொருட்கள் வாங்கி செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.