நீலகிரி மாவட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதகை அரசு கலைக்கல்லூரி இணைந்து நடத்திய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், இல்லம் தேடிக் கல்வி,
நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நமது மாவட்டத்திலும் சிறப்பாக
செயல்படுத்தப்பட்டு வருகிறது, அது மட்டுமல்லாமல் படித்து முடித்த மாணாக்கர்களின் தொழில் முனைவோர் கனவுகளை நனவாக்க பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடைபெறும் இந்த கருத்தரங்கினை மாணாக்கர்கள் திறம்பட கையாண்டு, நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிற்துறையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளது. தற்போது நீங்கள் படித்து கொண்டிருக்கும் இளநிலை பட்டப்படிப்பு முடித்து, உங்களது நேரத்தை வீணாக்காமல் சுய தொழில் குறித்து அறிந்து கொள்ள பல்வேறு வழிகாட்டு கையேடுகள் உள்ளது. இதன் மூலம் பல்வேறு வகையான தொழிற்கல்விகள் கற்றுத்தரப்படுகிறது. குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக பல்வேறு விவரங்களும் கிடைக்கப்பெறும். மேலும், கல்வி கற்றலின் இடைவேளை நேரங்களில் இப்புத்தகத்தை எடுத்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் அரசால் நடத்தப்படும் mபோட்டித்தேர்வுகளில் மாணவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.நீங்களெல்லாம் யாரையும் எதிர்பாராமல் தனித்தன்மையுடன் பொருளாதாரத்தின்
முன்னேறி இருக்க வேண்டுமானால் போட்டித்தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுகுறித்தான பல்வேறு விவரங்கள் அடங்கிய புத்தகங்கள், பயிற்சிகள், ஆலோசனைகள் ஆகியவற்றை இக்கருத்தரங்கத்தில் எளிதாக அறிந்துக் கொள்ள முடியும். எனவே இக்கருத்தரங்கத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார், அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொழிற்நெறி வழிகாட்டு கையேடுகளை கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார், இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்த் கலாகி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல் ஹமீது, முதல்வர் உதகை அரசு கலைக்கல்லூரி முனைவர் ராமலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்,.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0