நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மக்களுக்காக அறக்கட்டளை நிறுவனர் தலைவர் தமிழ் வெங்கடேசன் தலைமை ஏற்பாட்டில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்,கல்வி உதவி தொகை வழங்கபட்டது. மசினகுடி காவல்துறை ஆய்வாளர் சிவக்குமார் ,தலைமை காவலர் மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்,கல்வி உதவி தொகையை வழங்கி சிறப்பாக கல்வி பயில மாணவ மாணவிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்தார், சமுக சேவகர் ஜெர்மினா,அரைஷ் அன் சைன் அறக்கட்டளை நிறுவனர் ஜாம்பவான் ஜெரால்ட் ,செய்தியாளர்கள்,ஆல் இந்திய ரேடியோ சரவணன், ராகம் டிவி ஜான்,உள்ளாட்சி சாரல் நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
வாழை தோட்டம் பகுதியை சேர்ந்த மிகவும் ஏழ்மையான மாணவன் பாசில்அலி திருப்பூரில் கல்வி பயில ஒரு ஆண்டு்கான கல்லூரி கட்டணம் வழங்கபட்டது தனக்கு ஒரு ஆண்டுக்கான கல்வி உதவி தொகை வழங்கிய மக்களுக்காக அறக்கட்டளை நிறுவனர் தலைவர் தமிழ் வெங்கடேசனுக்கு மாணவன் பாசில்அலி நெகிழ்வுடன் நன்றி தெரிவித்தார், தொடர்ந்து விழா நன்றி உரையுடன் விடைபெற்றது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0