நீலகிரி மாவட்டத்தில் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில்.. பிளாஸ்டிக் பைகளால் தீங்கு குறித்த விழிப்புணர்வு

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு குறித்த பசுமை வீரர்கள் குழுவால் மேற்கொள்ளப்படவுள்ள நெகிழி விழிப்புணர்வு மின்சார இருசக்கர வாகன பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து, தொடங்கி வைத்து, குழுவினருக்கு மஞ்சப்பைகளை வழங்கினார். உடன் உதகை வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜே.ஹேமந்த் ஜோசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.