நீலகிரி மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56-வது நினைவு நாள்

நீலகிரி மாவட்ட உதகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56-வது நினைவு நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்ச்சிகள் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, உதகை நகர செயலாளர் ஜார்ஜ், உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, சதக்கத்துல்லா, உதகை நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, சோலூர் பேரூர் செயலாளர் பிரகாஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முன்னதாக நிர்வாகிகள் அனைவரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர், நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, காந்தல் ரவி, ரஹமத்துல்லா, நகர அவை தலைவர் கோபி, உதகை நகர துணை செயலாளர்கள் கிருஷ்ணன், ரீட்டாமேரி, நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், தம்பி இஸ்மாயில், சத்தியநாதன், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகராஜ், கஜேந்திரன், ஆட்டோ ராஜன், தியாகு, மார்கெட் ரவி, விஜி, மஞ்சுகுமார், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் மீனா, திவ்யா மேரி பிளோரீனா, பிரியா வினோதினி, பிளோரினா மற்றும் கழக நிர்வாகிகள் ஸ்டீபன், கமல், லுயிசா, சர்மிளா, சிவகுமார் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் திரளாக கலந்துக்கொண்டனர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு கழகத்தோடு இணைந்து மழைத்துளி மரியாதை செலுத்தி சென்றனர்.